முதல் காதல் குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த், என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ரஜினிகாந்த் அவருடைய முதல் காதல் குறித்து பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினிகாந்தின் முதல் காதல் குறித்து நடிகர் தேவன் சொல்லி இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கையில் முதல் காதல் கை கூடாமல் போய் உள்ளது. அன்று அவள் சொன்னால் உங்களுடைய படத்தின் போஸ்டர் நான் பார்க்கணும் கட்டவுட் பார்க்கணும் நீங்க ஒரு பெரிய நடிகராக வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டதாகவும் அன்றிலிருந்து அவளைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் ரஜினி கூறியிருக்கிறார். ஆனால் பார்க்க முடியவில்லை. அது ஒரு அழகான காதல் கதை என்று கூறியிருக்கிறார்.
நடிகர் ரஜினியின் காதல் கதையை நடிகர் தேவன் சொல்லியிருப்பது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
