ரஜினி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் கே ஜி எஃப் நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் இந்திய தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களால் என்றென்றும் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. அதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று இணையத்தில் ஏற்கனவே பரவி வருகிறது.

இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருக்கும் நிலையில் இதுதான் ரஜினி நடிக்க இருக்கும் கடைசி படம் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட்டாக இதில் முக்கிய வேடத்தில் நடிக்க கேஜிஎஃப் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் யாஷ்ஷிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.