பெங்களூரில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மனைவியுடன் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து உருவாகி வரும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பல மொழி உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விரைவில் நிறைவடைய இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி தற்போது மங்களூருவில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் மகா சிவராத்திரி விழாவை கொண்டாடுவதற்காக பெங்களூர் வந்துள்ளார். அங்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய சிறப்பு பூஜையில் கலந்து கொண்டிருந்த ரஜினி தியானத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.