ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட அழகான புகைப்படம் வைரல்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். ரசிகர்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அன்றும் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் டிசம்பர் 12ஆம் தேதியான நேற்று தனது 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதற்கு திரை வட்டாரமும், ரசிகர்களும் தங்களுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் அவரது பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்தை எப்போதும் இதே போல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று பதிவிட்டு அப்புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.