லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி-கமல் இணைய இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் RKFI புரொடக்ஷன்ஸ் நிறுவனமான நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

தற்போது அந்த தகவலின் படி அப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், இது குறித்து பேச ரஜினியிடம் இருந்து லோகேஷ் கனகராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையதளத்தை அதிர விட்டு வருகிறது.