ரஜினியின் ‘கூலி’ பட 3-வது ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிகிட்டு’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டு, ரசிகர்களை ஈர்த்தது. தற்போது, படத்தின் மூன்றாவது சிங்கிளாக ‘பவர் ஹவுஸ்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, அனிருத் உடன் இணைந்து பாடியுள்ளார்.
ரஜினிகாந்தை போற்றும் வகையில், பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. ‘கெட்ட பையன் டா’, ‘பத்த வெச்சிட்டயே பரட்ட’ என முந்தைய ரஜினி பட வசனங்கள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 3.29 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இப்பாடலை ரஜினிகாந்த், அனிருத், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் கொண்டாடி வைரலாய் தெறிக்கிறது.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, அமீர்கான், சவுபின் சாகிர் உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
