Rajinikanth Final Decison on Political Entry

நாலுபேரு நாலுவிதமா பேசினால் கூட எனக்கு கவலை இல்லை. நான் புதிய கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Rajinikanth Final Decison on Political Entry : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருந்தார்.

மேலும் தன்னுடைய புதிய கட்சி தொடங்குவது குறித்த தேதி டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அதாவது 120 பேர் கலந்துகொண்ட படப்பிடிப்பிலேயே கொரானா பாதிப்பு ஏற்படுகிறது. அரசியலுக்கு வந்தால் வெறும் செய்தியாளர்களை சந்தித்து மட்டுமே மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி விட முடியாது. களத்தில் இறங்கிய மக்களை சந்திக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து மீண்டும் பரவத் தொடங்கி உள்ள நிலையில் மக்களை நேரில் சந்தித்தால் என்னை நம்பி உள்ள பலருக்கு பிரச்சனைகளும் சங்கடங்களும் ஏற்படும்.

இந்த நாள் நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை என தெரிவித்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் கால் பதித்து அடுத்த முதல்வராக அரியணையில் அமர்வார் என எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.