Rajinikanth Blast District Secreties

என்னுடன் இருப்பவர்கள் சம்பாதிக்க முடியாது மக்களுக்காக உழைக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்.

Rajinikanth Blast District Secreties : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருந்த ரஜினிகாந்த் சமீபத்தில் அந்த முடிவிலிருந்து பின் வாங்குவது போன்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் அவர் மாவட்டச் செயலாளர்களை தன்னுடைய ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசி வருகிறார்.

அப்போது என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது. மக்களுக்காக உழைக்க வேண்டும். இதனை நான் பலமுறை கூறியும் சில மாவட்டச் செயலாளர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.

அவர்கள் மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் அவர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் இது அரசியல் சார்ந்த சந்திப்பா? அல்லது மாவட்ட செயலாளர்கள் பற்றிய சந்திப்பா என குழம்பியுள்ளனர்.