விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் பார்வையிட்ட ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த்
ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ” விண்வெளி அறிவியல் பாடம்” தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை திரு. ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள்.
இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கண்டு களிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் அனுமதி இலவசமாகும் .அடுத்த மாதம் (ஜூன்) 10 ஆம் தேதி வரை பார்த்து ரசிக்கலாம்.

இந்த கண்காட்சியில் ராக்கெட் மற்றும் தொலை நோக்கி உருவாக்கம், திறந்தவெளி திரையரங்கம், நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியின் மாதிரி அறை , நிலா வடிவிலான பலூன், வான் பொருட்களை காணுதல், கோளரங்கம், கோள்களின் கண்காட்சி என ஏராளமான விண்வெளி அதிசயங்கள் இடம் பெற்றுள்ளன.
