Rajini Tv : டிவி சேனல் தொடங்க இருப்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சேனலின் பெயர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய டிவி சேனல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.

அப்போது டிவி சேனல் குறித்த கேள்விக்கு வேறு யாரும் இந்த பெயர்களில் பதிவு செய்து விட கூடாது என்பதற்காக ரஜினி டிவி, தலைவர் டிவி, சூப்பர் ஸ்டார் டிவி ஆகிய மூன்று பெயர்களில் பதிவு செய்து இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கட்சி தொடங்கியவுடன் டிவி சேனல் தொடங்கப்படும் எனவும் அப்போது கூட்டணி குறித்து பேசலாம் எனவும் பதிலளித்துள்ளார்.

Rajini TV

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.