Rajini New Look
Rajini New Look

Rajini New Look – முருகதாஸ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேடம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை ஆடி வருகிறது.

இந்த படத்தை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு நாற்காலி என பெயரிடப்பட்டு இருப்பதாகவும் ரஜினி முதல்வராக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் முருகதாஸ் இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் அது ரசிகர்களுக்கு நிச்சயம் செம ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.