நெல்சன், ரஜினியுடன் கன்னட நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajini in Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றது.

நெல்சன், ரஜினியுடன் கூட்டணி சேரும் கன்னட நடிகர்.. புதிய படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்

இதனைத் தொடர்ந்து விஜய், நெல்சன் கூட்டணியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ளது. இதன் இறுதி தற்போது இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நெல்சன், ரஜினியுடன் கூட்டணி சேரும் கன்னட நடிகர்.. புதிய படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்

இதற்காக நெல்சன் பெங்களூரு சென்று சிவராஜ் குமார் அவர்களை சந்தித்துப் பேச இருப்பதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது