சேர்ந்து வாழ சிவகாமி சத்யம் கேட்க பாரதி முடிவெடுத்துள்ளார்.

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி என இரண்டு சீரியல்களும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

சேர்ந்து வாழ சத்தியம் கேட்ட சிவகாமி.. பாரதி எடுத்த முடிவு - ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் அப்டேட்

இன்றைய எபிசோடில் கண்ணம்மா ஹேமா தன்னுடைய மகள் என்ற மொத்த உண்மைகளையும் உடைத்த நிலையில் சிவகாமி இருவரும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என சத்தியம் கேட்க கண்ணம்மா அவருடன் சேர்ந்து வாழ்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் அவர் நான் செய்ததெல்லாம் தப்பு என மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார். சிவகாமி சிறிய மன்னிப்பு தானே கேட்டு கண்ணம்மாவோடு சேர்ந்து வாழ் பாரதி என கேட்க பாரதி அது மட்டும் என்னால் முடியாது என்னை மன்னிச்சிடுங்க என சொல்லிவிட்டு ஹேமாவை கூப்பிட ஹேமா கீழே இறங்கி வரேன் வெளியே போகலாம் என சொல்லி கூப்பிடுகிறார்.

எங்கே போக போறோம் என ஹேமா கேட்க பக்கத்தில் இருக்க மால்ல போயிட்டு கேம் விளையாடலாம் என சொல்கிறார். அம்மா போட்டோவ எடுத்துக்கட்டுமா என கேட்க பாரதியும் சரியென சொல்ல அதை எடுத்து வந்து கண்ணம்மாவிடம் எங்க அம்மா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க என காட்டுகிறாள். பிறகு எல்லோருக்கும் பாய் சொல்லிவிட்டு பாரதி ஹேமாவை கூட்டிக் கொண்டு கிளம்புகிறார்.

சேர்ந்து வாழ சத்தியம் கேட்ட சிவகாமி.. பாரதி எடுத்த முடிவு - ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் அப்டேட்

அதன் பிறகு கண்ணம்மா சௌந்தர்யாவிடம் வந்து என் பொண்ணு என கண்கலங்கி அழுது நான் ஃபங்ஷன்ல பிரச்சனை பண்ணனும்னு நெனச்சு வரல என்ன மன்னிச்சிடுங்க என்னை மன்னிப்பு கேட்க சௌந்தர்யா உன்னுடைய நிலைமை எனக்கு புரியுது என ஆறுதல் கூறுகிறார். இந்த நேரத்தில் வந்துவிட கண்ணம்மா கண்களை துடைத்துக் கொண்டு வீட்டுக்கு போகலாமா என கேட்கிறார். பிறகு கண்ணம்மா எல்லோரிடமும் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பி செல்கிறார்.

கண்ணம்மா போனதும் சிவகாமி நிச்சயம் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று தேடுவாங்க அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு என ஆறுதல் கூறுகிறார். சந்தியா எங்களுக்கு ஹேமா என்னுடைய அம்மாவை காட்டுங்கள் நீ கேட்ட போது தான் இவர்களுக்கிடையே பிரச்சனை இருக்குன்னு எங்களுக்கு தெரியும் என சொல்கிறார். பிறகு சௌந்தர்யா நீங்களும் சந்தியா போலீசாக வேண்டும் என்பது பற்றி யோசிங்க என சொல்ல சிவகாமி இதுவரைக்கும் என்னுடைய மனசுல குடும்பம் தான் முக்கியம் என்ற எண்ணம் தான் இருக்கிறது. ஆனால் நீங்க சொன்ன விஷயம் என்னை யோசிக்க வைக்கிறது நான் ஊருக்கு போய் யோசிச்சு ஒரு பதிலை சொல்கிறேன். ஆனால் கண்டிப்பாக நல்ல பதிலாக இருக்கும் என என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என கூறுகிறார். நீங்க யோசிக்கறேன்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் என சௌந்தர்யா சொல்ல பிறகு சிவகாமி ஊருக்கு கிளம்புகிறோம் என்று சொல்லி குடும்பத்தோடு விடை பெறுகின்றனர்.

இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட்டின் இரண்டாம் பாதியில் முடிவடைகிறது.