
ராஜா ராணி 2 சீரியலுக்கு டாட்டா காட்டி புதிய சீரியலில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் பிரபல நடிகை.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக ஆல்யா மானசா நடித்த நிலையில் நாயகனாக சித்து நடிக்க தொடங்கினார்.

தற்போது வரை சித்து மாறாமல் நடித்து வர நாயகியாக ஆலியா மானசாவுக்கு பிறகு ரியா விஸ்வநாதன் நடிக்க தொடங்கினார். அவருக்கு அடுத்தபடியாக தற்போது ஆஷா கவுடா நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் சரவணன் தங்கையாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் டிக் டாக் பிரபலம் வைஷு சுந்தர் நடித்து வந்தார். தற்போது இவர் விஜய் டிவியின் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நாயகி ஆக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பொன்னி என்ற சீரியல் தான் வைசு சுந்தர் நாயகியாக நடிக்கிறார். இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அப்பாவுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் மகளாக வைசு சுந்தர் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் இவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகி இருப்பது உறுதியாகி உள்ளது.