ஹோட்டலுக்கு போன இடத்தில் சந்தியாவுக்கு போன் கால் ஒன்று வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் ஒன்றாக அமர்ந்து தேவையான டிஸ்சை ஆர்டர் செய்து சாப்பிட தொடங்க அப்போது சந்தியாவுக்கு ஒரு போன் கால் வர சந்தியா வெளியே வந்து பேசுகிறார்.

அப்போது ஸ்டேஷன் ரைட்டர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் சரக்கைகளில் இருந்து வெளியே கொண்டு பார்க்க முயற்சி செய்வதாக சொல்ல சந்தியா உடனடியாக ஸ்டேஷனுக்கு கிளம்பி வந்து இன்ஸ்பெக்டரின் திட்டத்தை முறியடிக்கிறார். பிறகு வண்டியில் இருந்த சரக்குகளை சரவணன் ஸ்வீட் கடை குடோனில் இறக்கி வைக்கிறார். போலீசையும் பாதுகாப்புக்கு நிறுத்துகிறார்.

இந்த பக்கம் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்க சிவகாமி சந்தியா ஆள் இல்லாமல் போனதால் அவரை திட்டிட்டு இருக்கிறார் இதுக்கு தான் இந்த மாதிரி வேலை வேண்டாம் என்று சொன்னதாக கூறுகிறார். பிறகு சரவணன் போன் வர வெளியே சென்று விடுகிறார்.

அடுத்து எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு பில் கேட்க அங்கு வரும் கடைக்காரர் அதெல்லாம் நீங்க எதுவும் பணம் கட்ட வேண்டாம் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சிவகாமி நாங்க அப்படியெல்லாம் சந்தியா பெயரை சொல்லி சும்மா சாப்பிட்டு போகிற ஆளுங்க கிடையாது பில் கொண்டு வாங்க என சொல்ல ஹோட்டல் ஓனர் கறாராக பில் எல்லாம் கட்ட வேண்டாம் என சொல்ல வேறு வழியில்லாமல் எல்லோரும் கிளம்பி செல்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.