
சந்தியாவுக்கு எஸ்பி கொடுத்த தண்டனை ஒரு பக்கம் இருக்க சிவகாமி குடும்பத்துக்கு அடுத்த பிரச்சனை வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா ஸ்டேஷனுக்கு வரேன் அப்போது வாக்கி டாக்கி ஆப் செய்து வைத்திருந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டதும் எஸ் பி உங்களை பற்றி கேட்ட விஷயத்தை போலீஸ்காரர்கள் சொல்கின்றனர்.

அதன் பிறகு சந்தியாவுக்கு எஸ்பி போன் செய்து தன்னை வந்து பார்க்குமாறு சொல்ல சந்தியா கிளம்பி செல்கிறார். எஸ் பி வேண்டும் என்றே சந்தியாவை காக்க வைத்து உட்கார சேர் கூட இல்லாமல் செய்கிறார். இந்த பக்கம் சந்தியா கால் கிடக்க நின்று கொண்டிருக்க மறுப்பக்கம் கவிதாவின் சூழ்ச்சியால் ஜெஸ்ஸியின் பியூட்டி பார்லரில் ரைடு நடக்கிறது.

பியூட்டி பார்லர் நடத்துவதற்கான உரிய லைசென்ஸ் இல்லாத காரணத்தினால் கடைக்கு சீல் வைக்கப் போவதாக சொல்ல அங்கு வரும் சிவகாமி குடும்பம் மொத்தமும் அதிகாரிகளிடம் கெஞ்ச அவர்கள் சீல் வைப்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆதி சந்தியாவுக்கு போன் செய்ய சந்தியா எஸ் பி ஆபிஸில் போனில் பேச அனுமதி இல்லை என்பதால் அப்புறம் பேசுவதாக சொல்லி போனை கட் செய்து விடுகிறார்.

பிறகு சரவணனுக்கு போன் போட சரவணன் போனை எடுக்காமல் இருக்க அதிகாரிகள் சீல் வைத்துவிட்டு கிளம்புகின்றனர். வீட்டுக்கு வந்த ஜெசி அர்ச்சனா தான் இப்படி தகவல் கொடுத்து இருப்பார் என சந்தேகப்பட்டு பேச சிவகாமி ஜெஸ்ஸிக்கு ஆதரவாக பேச அர்ச்சனா வீட்டை விட்டு வெளியே போக முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.