போட்டிக்கு வந்த இடத்தில் சந்தியாவுக்கும் சரவணனுக்கும் இடையே ரொமான்ஸ் பொங்கியுள்ளது.

Raja Rani 2 Episode Update 26.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. போட்டிக்கான இன்விடேஷன் கிடைத்ததை தொடர்ந்து சந்தியா சரவணன் பிளைட்டில் சென்னைக்கு கிளம்புகின்றனர். இவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது சிவகாமி சாமி கும்பிட வைத்துவிட்டு அனுப்பி வைக்கிறார். இந்த நேரத்தில் சரியாக மேல தாளமும் வீட்டிற்கு வந்து விட ஒரு தூள் கிளப்புகின்றனர். பார்வதியின் வருங்கால கணவர் பாஸ்கரும் சர்ப்ரைஸாக வந்து வாழ்த்து கூறுகிறார்.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

போட்டிக்கு வந்த இடத்தில் பொங்கும் சந்தியா சரவணன் ரொமானஸ்.. செந்திலிடம் சிக்கிய அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு போகும் நேரத்தில் சிவகாமி அர்ச்சனாவை அழைத்து முதல்ல நீங்க அர்ச்சனாவுக்கு தான் நன்றி சொல்லனும் என கூறுகிறார். அர்ச்சனாவின் வயித்தெரிச்சல் இன்னும் அதிகமாகிறது. பிறகு ஒரு வழியாக இருவரும் சென்னை வந்தடைகின்றனர்.

இந்தப் பக்கம் அர்ச்சனா கடைசி நேரத்துல இன்விடேஷன் எடுத்துட்டு வந்து கொடுத்து நல்ல பேர் வாங்க நினைச்சது தப்பா போச்சு. நாம கெட்டவளாகவே இருக்கணும். அது தான் சரி என கூறுகிறார். இவர் புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் செந்தில் உள்ளே வருகிறார். நீ தானே இது செஞ்ச என கேட்கிறார். அதுவும் அப்படியே நேரில் இருந்து பார்த்தது போலவே அர்ச்சனாவின் திட்டத்தை புட்டு புட்டு வைக்கிறார்.

போட்டிக்கு வந்த இடத்தில் பொங்கும் சந்தியா சரவணன் ரொமானஸ்.. செந்திலிடம் சிக்கிய அர்ச்சனா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஆனால் அர்ச்சனா எதையெதையோ சொல்லி சமாளித்து வருகிறார். கட்டின புருஷன் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லனா எப்படி என கூறுகிறார். அச்சுனு சொல்லிக்கிட்டு வருவீங்கள அப்போ வச்சிக்கிறேன் என கூறுகிறார். ஆனாலும் செந்தில் மேல ஒரு கண்ணு வைக்கணும் என சந்தேகத்துடனேயே அங்கிருந்து கிளம்புகிறார்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம்

போட்டிக்கு வந்த சந்தியா சரவணன் ஹோட்டலுக்கு வந்ததும் அவர்களுக்கு ஜூஸ் கொடுக்கின்றனர். இருவரும் ஜூஸ் குடித்து கொண்டிருக்கும் வேலையில் சரவணன் அவருடைய கிளாசிக் கீழே வைத்ததும் சந்தியா அதை அவருக்கு தெரியாமல் மாற்றி எடுத்துக் கொள்கிறார். சந்தியா வைத்த கிளாசில் லிஃப்டிக் கரை இருப்பதை பார்த்து சரவணன் அதை கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் சந்தியா நான் எதுக்கு உங்க டம்ளரை மாத்தி எடுக்க போறேன் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என கூறுகிறார். இதையெல்லாம் பார்த்த சரத் சாவியைக் கொடுத்துவிட்டு இருவரையும் கிண்டலடிக்கிறார். அவன் கிடக்கிறான் பைத்தியக்காரன் என சந்தியா கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவரைகிறது.