சந்தியாவிடம் தோழி ஒருவர் கர்ப்பத்தை கலைக்கச் சொல்ல அவள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா கர்ப்பமாக இருப்பதாக செய்தியை கேட்டுக் குடும்பத்தார் எல்லோரும் சந்தோஷமாக இருக்க சரவணன் டல்லாக இருக்கிறார். எல்லோரும் ஏன் இப்படி இருக்க என கேட்க அர்ச்சனா சந்தியா கர்ப்பமாக இருப்பதால் போலீசாக முடியாது என வருத்தமாக இருக்கிறார் என சொல்ல செந்தில் அர்ச்சனாவை அமைதியாக இருக்க சொல்கிறான்.

கர்ப்பத்தை கலைக்க சொல்லும் தோழி.. சந்தியா எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் சந்தியா யோசனையில் இருக்க அப்போது வரும் அவரது தோழி கர்ப்பத்தை கலைத்து விட சொன்ன சந்தியா அது என்னால் ஒருபோதும் செய்ய முடியாது என கூறி விடுகிறார். சரவணன் வருத்தமாக இருக்க அவரது அப்பா என்னை ஏது என விசாரிக்க சந்தியா கர்ப்பமானதால் அவர் போலீஸ் ஆவது பிரச்சினையாகி விட்டது பயிற்சிக்கு போகட்டும் யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என ஆறுதல் கூறுகிறார்.

அடுத்து சரவணன் சந்தியாவுக்கு போன் போட்டு வருத்தப்பட்டு பேச முதலில் குழந்தையை பெற்றெடுக்கலாம் அப்புறம் பயிற்சிக்கு போகலாம் என ஆறுதல் கூறுகிறார் சந்தியா. சிவகாமி காய்கறி வாங்க பொய் எல்லோரிடமும் சந்தியா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார்.

கர்ப்பத்தை கலைக்க சொல்லும் தோழி.. சந்தியா எடுத்த முடிவு - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு அர்ச்சனா சந்தியாவுக்கு போன் போட்டு குழந்தையை பெத்துக்கிட்டா எப்படி பயிற்சிக்கு போக யாரும் குழந்தையை வளர்ப்பாங்க என வெறுப்பேத்த சந்தியா அந்த வேலையை நிச்சயம் உன்கிட்ட தரமாட்டேன் என் குழந்தையை நானே வளர்த்திடுவேன் நீ கவலைப்படாதே என செல்கிறார். அதே சமயம் என்னுடைய கனவையும் நான் கண்டிப்பாக அடைவேன் என சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.