சிவகாமியால் சந்தியாவுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ச்சனா பூஜை அறையில் சாமி போட்டோவுக்கு பூஜை செய்ய செந்தில் சிவகாமியை கூட்டி வந்து காமிக்க ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கா? என கேட்க பக்கத்து வீட்டு குழந்தைக்கு சரியாக என்ற விஷயத்தை சொல்ல சிவகாமி அந்த குழந்தை மேல இவ ரொம்ப பாசமா இருப்ப அதனால்தான் மனச கேக்காம இப்படி பண்ற போல என சொல்லி வெளியே செல்கிறார்.

அதன் பிறகு சந்தியா சரவணன் ரூமில் தூங்கிக் கொண்டிருக்க சிவகாமி வாக்கி டாக்கி சத்தத்தால் தூக்கம் வரவில்லை என புலம்பிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் எழுந்து சென்று சரவணன் ரூமை திறந்து வாக்கி டாக்கியை ஆப் செய்து விடுகிறார்.

இந்த நேரத்தில் ஒரு எமர்ஜென்சி கேஸ் ஒன்று வர அது சந்தியாவுக்கு தெரியாமல் போகிறது. எஸ் பி ரவுண்ட்ஸ் வரும்போது விஷயத்தை சந்தியாவுக்கு சொல்லியாச்சா என கேட்க அவங்கள ரீச் பண்ண முடியல, வாக்கி டாக்கி ஆஃப்ல இருக்கு போல என போட்டுக் கொடுக்க இந்தியாவிற்கு நான் பாடம் புகட்டிறேன் என அவர் எச்சரிக்கிறார்.

மறுநாள் காலையில் எழுந்ததும் சந்தியா வாக்கி டாக்கி ஆப் ஆகி இருப்பதால் அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் அர்ச்சனா நேத்து நைட்டு தான் சத்தம் இல்லாமல் நிம்மதியா இருந்துச்சு என பேசிக்கொண்டு இருக்க சந்தியா அர்ச்சனாவிடம் நீ தான் வாக்கி டாக்கிய ஆப் பண்ணியா என கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த நேரத்தில் அங்கு வரும் சிவகாமி அதை நான் தான் ஆப் பண்ணி வச்சேன் நிம்மதியா தூங்க முடியுதா ஏதோ போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள குத்தனும் நடத்துற மாதிரி இருக்கு என பேசுகிறார். அடுத்து சந்தியா ரூமுக்குள் வருத்தமாக உட்கார்ந்து இருக்க சரவணன் ஏதாவது பிரச்சனையா எனக்கு கேட்க எதுவும் எமர்ஜென்சி இல்லன்னு நினைக்கிறேன் எனக்கு எதுவும் போன் வரல என சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.