குழந்தை பெற்றுக் கொள்ள சந்தியா தயாராகி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா சரவணனிடம் நெருங்கி வர அப்போது அவருக்கு எஸ் பி இடமிருந்து போன் கால் வருகிறது. சொன்ன நேரத்திற்குள் ரவுடியை பிடிக்க வேண்டும் என ஆர்டர் போடுகிறார்.

அதன் பிறகு சந்தியா மீண்டும் சரவணனிடம் நெருங்கி வர வேண்டாங்க அப்புறம் தப்பாகிவிடும் என சொல்ல அப்படி என்ன ஆகிடும் என சந்தியா கேட்க சரவணன் ஏற்கனவே நீங்க பிராக்டிஸ்ல இருக்கும் போது இந்த மாதிரி நடந்து டேட் தள்ளிப் போச்சு, அதே மாதிரி திரும்பவும் ஆயுத போது என சொல்ல ஏன் ஐபிஎஸ் எல்லாம் குழந்தை பெத்துக்க கூடாதா என சந்தியா கேட்க சரவணன் உங்களுக்கு ஓகேவா என கேட்க டபுள் ஓகே என சொல்ல இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர்.

அடுத்து மறுநாள் காலையில் சந்தியா வேலைக்கு கிளம்பிச் செல்ல சிவகாமி இன்னைக்கு சஷ்டி விரதம் சாயங்காலம் பூஜை முடிகிற வரைக்கும் பச்ச தண்ணி கூட குடிக்க கூடாது என சொல்லி அனுப்புகிறார். பிறகு சிவகாமி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்க ஒரு கடையில் கூட அவரிடம் இருந்து யாரும் காசு வாங்கவில்லை. சந்தியாவால் இது ஒன்றுதான் லாபம் என வீட்டுக்கு வருகிறார்.

அடுத்து சந்தியா ரவுடி மகேஷ் என்பவரை சுற்றி வளைத்து பிடிக்க கடைசியில் வெயிலில் அவருக்கு மயக்கம் வந்து கீழே விழுந்து விட போலீஸ் காரர்கள் சந்தியாவை கவனிக்க இந்த நேரத்தில் ரவுடி மகேஷ் எஸ்கேப் ஆகிவிடுகிறான். ஏற்கனவே சந்தியா எஸ் பி க்கு போன் செய்து ரவுடிச்சிக்கு விஷயத்தை கூறியிருந்த நிலையில் தற்போது அவன் தப்பி விட்டதால் சிக்கல் எரிந்துள்ளது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.