சல்மாவுடன் சேர்ந்து சமைத்த போட்டியில் சரவணன் வெற்றி பெற்ற நிலையில் அர்ச்சனா புது திட்டம் போடுகிறார்.

Raja Rani 2 Episode Update 20.12.21 : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சல்மா உடன் சேர்ந்து சமைக்கும் சூழ்நிலை உருவான நிலையில் அவருடன் சேர்ந்து சமைத்த சரவணன் அந்தப் போட்டியில் வெற்றி கண்டார். இதனையடுத்து நிகழ்ச்சி குழுவினர் அனைவரும் அவரையும் அவரது சமையலையும் பாராட்டினர்.

பிறகு மேடையில் இருந்து இறங்கி வந்த சரவணனை குடும்பத்தார் அனைவரும் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தனர். அசத்திட்டடா சரவணா என அனைவரும் அவரை உற்சாகப்படுத்தினார். ஆதி வழக்கம் போல இன்னும் நிறைய போட்டிகள் இருக்கு அதெல்லாம் ஜெயிக்கணும் என நக்கல் அடிக்க செந்தில் இத்தன ரவுண்டுல ஜெயிச்ச மாதிரி சரவணன் ஜெயிப்பார் என கூறுகிறார்.

பிறகு அனைவரும் சாப்பிட போனது சந்தியா அவரை பாராட்டுகிறார். அவரை கட்டியணைத்து வாழ்த்து சொல்ல ஆசைப்படுகிறார். ஆனால் அதை செய்யாமல் அவர் அங்கிருந்து சென்றுவிடுகிறார். பிறகு சக போட்டியாளர் ஒருவர் வந்து சரவணனிடம் சந்தியா உங்களை கட்டி அணைத்து வாழ்த்து சொல்ல நினைக்கிறாங்க. ஆனா வெட்கப்பட்டுகிட்டு போய்ட்டாங்க நீங்க போயிட்டு அவங்க கிட்ட உங்க காதலை சொல்லுங்கள் என கூறுகிறார்.

பிறகு சந்தியா சரவணனை கட்டி அணைத்துக் கொள்ள சரவணன் சந்தியாவிற்கு நெற்றியில் முத்தமிடுகிறார். பிறகு ரூமுக்கு போன சரவணனுக்கு சிவகாமி திருஷ்டி கழிக்கிறார். அதன்பிறகு போட்டி நடத்தும் குழுவினரிடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது. அதில் இந்த போட்டியில் ஜெயித்த அவர்களுக்கு ஒரு பார்ட்டி வைத்து இருக்கோம் என சொல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கோட் சூட்டில் வரவேண்டும் என சொல்கின்றனர்.

இந்த விஷயத்தை சந்தியா சொல்ல ஆதி கோட்டு சூட்டா என கிண்டல் அடிக்கிறார். பிறகு சரவணன் அதெல்லாம் வேண்டாம் என சொல்ல அதெல்லாம் உங்களுக்கு நல்லா தான் இருக்கும் என கூறுகிறார். உடனே அர்ச்சனா அதான் அவர்கிட்ட இல்லையே என சொல்ல அவங்களே வவுச்சர் தருவாங்க அத வச்சு நம்ம வாங்கிக்கணும் என கூறுகிறார்.

அப்ப என்ன என்ன என்ன சிவகாமி கேட்க பேங்கில் செக் தருவது போல, அது கொடுத்து நாம துணி வாங்கிக்கலாம் என கூறுகிறார். சரி நாங்க போயிட்டு அதை வாங்கிட்டு வரேன் நாளைக்கு காலையில போயிட்டு துணி எடுக்கலாம் என கூறுகிறார். சரவணன் கொடுத்து வைத்தவன் என்று குடும்பத்தார் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இதனால் அர்ச்சனா ரொம்ப சந்தோஷப்படாதீங்க இந்த முறை ஏதோ கவனக்குறைவாக இருந்துட்டேன். சரவணன் சந்தியாவை இந்த போட்டியில் கண்டிப்பாக தோற்கடித்து அசிங்கப்பட்டு தான் ஊருக்குப் போவோம் என மனதிற்குள் கூறிக் கொள்கிறார்.

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.