சந்தியாவுக்கு கௌரி மேடம் போட்ட அதிர்ச்சி கண்டிஷனால் புது சிக்கல் உருவாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் வீடியோக்கள் பேச சந்தியா பாக்சிங் பயிற்சிக்காக தலையில் கேப் போட்டு இருந்ததால் முடி இருக்கிறதா இல்லையா என தெரியாமல் இருக்க அர்ச்சனா முடி வெட்டிட்டா போலயே என கோர்த்து விட சிவகாமி தலையில் இருப்பதை கழுவிட்டு சொல்ல அந்த நேரத்தில் அங்கு வரும் சந்தியாவின் தோழி உள்ளே கூப்பிடுறாங்க என அழைத்துச் சென்று விடுகிறார்.

சந்தியாவுக்கு கௌரி மேடம் போட்ட அதிர்ச்சி கண்டிஷன்.. அர்ச்சனாவால் காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக சிவகாமி சரவணனிடம் முடிவெட்டிட்டாளா என கேட்க சரவணன் அதெல்லாம் இல்லை என கூறுகிறார். பிறகு இவர்களுக்கு பாக்ஸிங் போட்டி நடக்க சந்தியா எப்படி விளையாடப் போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க அந்த போட்டியில் ஜெயித்து விடுகிறார். பிறகு கௌரி மேடம் கூப்பிட்டு தலையில் இருக்கும் கேப்பை கழட்ட செல்ல சந்தியா முடி வெட்டாமல் இருப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறார்.

சந்தியா முடி வெட்டாததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஆனால் என்னுடைய வீக் பாய்ண்ட் என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை சரி செய்து கொண்டு இனி எல்லாவற்றிலும் முழு கவனத்துடன் செயல்படுவேன் என சொல்ல கௌரி மேடம் இனி வரும் எல்லா போட்டியிலும் நீ ஜெயிக்க வேண்டும் ஒரு சின்ன தவறு செய்தால் கூட பனிஷ்மென்ட் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எச்சரிக்கிறார். சந்தியா அதற்கு ஓகே என சம்மதிக்கிறார்.

சந்தியாவுக்கு கௌரி மேடம் போட்ட அதிர்ச்சி கண்டிஷன்.. அர்ச்சனாவால் காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து இந்த பக்கம் பக்கத்து விட்டார் குழந்தையை தூக்கி வந்து கொடுக்க சிவகாமி உட்பட எல்லோரும் அதை வாங்கி கொஞ்சி தீர்க்கின்றனர். அர்ச்சனா அதுதான் உங்களுடைய உண்மையான பேத்தி என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்‌‌. இப்படியான நிலையில் அடுத்து சந்தியாவுக்கு மல்டி டாஸ்க் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட அந்த நேரத்தில் அவர் மயங்கி விழுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.