செந்தில் சரவணன் இடையே மோதல் உருவாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் செந்தில் ஏன் இப்படி பண்றான் என ரூமில் யோசித்துக் கொண்டிருக்க மறுநாள் காலையில் சந்தியா முடியாமல் எழுந்து பிரக்டிஸ்க்கு தயாராகிறார். வழக்கம் போல் அப்துல் சந்தியா சும்மாவே பிராக்டிஸ் பண்ண மாட்டாங்க இதுல உடம்பு முடியலன்னா இன்னும் சுத்தம் என நக்கலாக பேசிக் கொண்டிருக்க அப்போது சந்தியா வெளியே வந்து ரன்னிங் போவதை பார்த்து பல்பு வாங்குகிறார்.

செந்தில் சரவணன் இடையே உருவான மோதல்.. ஷாக் கொடுத்த சந்தியா, அர்ச்சனா செய்த வேலை - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் ஜெசியின் பியூட்டி பார்லர் கடை திறப்பு விழா நடக்க ஆதி தன்னுடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு மாமனாரை அழைத்து கடையை திறந்து வைக்க சொல்ல சிவகாமி அதிர்ச்சி அடைகிறாள். அடுத்து பரந்தாமன் ஆட்கள் தேர்தலில் நிற்கும் செந்திலுக்கு ஆதரவாக பேனர் எடுத்து வந்து கோஷங்களை எழுப்ப மறுப்பக்கம் சரவணனின் ஆதரவாளர்கள் பேனர் எடுத்து வந்து கோஷங்களை எழுப்ப சிவகாமி குடும்பம் அதிர்ச்சி அடைகிறது.

இதையெல்லாம் அப்புறம் வீட்ல போய் பேசிக்கலாம் என சிவகாமி சொல்ல பேனர் கொண்டு வந்தவர்கள் கலைந்து செல்ல அதன் பிறகு அர்ச்சனா இதுக்கு இப்பவே ஒரு முடிவை சொல்லிடுங்க என பிரச்சனையை கிளப்ப செந்தில் சரவணன் இடையே வாக்குவாதம் உருவாகிறது. செந்தில் ஒரு கட்டத்தில் மனம் மாறும் நிலைக்கு வர அர்ச்சனா அதை தெரிந்து கொண்டு நான் என் குழந்தையை தூக்கிட்டு என் அப்பா வீட்டுக்கு போறேன் என ப்ளாக்மெயில் செய்கிறாள்.

செந்தில் சரவணன் இடையே உருவான மோதல்.. ஷாக் கொடுத்த சந்தியா, அர்ச்சனா செய்த வேலை - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக செந்தில் அர்ச்சனாவை வீட்டுக்கு அழைத்து வர பின்னர் சிவகாமி செந்திலை உட்கார வைத்து சாப்பாடு போட்டு கொண்டு இருக்க அவன் கடுப்பாகவே இருக்கிறான். இந்த நேரத்தில் சரவணன் வர சிவகாமி சரவணன் அழைத்து சாப்பாடு போட செந்தில் கோபமாக சாப்பாட்டை தட்டி விட்டு எழுந்து சென்று விடுகிறான். சரவணன் சாப்பாடு வேண்டாம் என சோகமாக எழுந்து சென்றுவிட சிவகாமி கண்கலங்கி அழுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.