சந்தியாவிற்கு சைலண்ட் வில்லியாக மாறியுள்ளார் சிவகாமி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு ஜெஸ்ஸி வீட்டுக்கு வரும் ஆதி அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றைக் கொடுத்து பிறகு இருவரும் நெருக்கமாக்கி தப்பு செய்து விடுகின்றனர். இதனால் ஜெஸ்ஸி நாம தப்பு பண்ணி இருக்க கூடாது என கதறி அழுகிறார். உடனடியா எங்க வீட்ல பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி பாப்பா ஏதாவது வந்துட்டா ரொம்ப சிக்கலாகிவிடும் என கதறுகிறார். ஆதி கண்டிப்பா எங்க வீட்ல பேசி நான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார்.

சந்தியாவுக்கு சைலன்ட் வில்லியாக மாறும் சிவகாமி.. காத்திருக்கும் சூழ்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் சந்தியா படித்துக் கொண்டிருக்க அங்கு வந்த அர்ச்சனா அத்தை அவர்களுடைய முடிவை மாத்திக்க கூட வாய்ப்பிருக்கு இங்க அத்தைக்கு மேல பாட்டி தான் பெரிய ஆளு அவங்க எடுக்க முடிவு தான் கடைசி முடிவு. நீ போலீஸ் கணவர் தூக்கிப்போட்டு ஸ்வீட் கடையில வேலை பார்த்து பிசினஸ் இருக்கிற வழிய பாரு என அர்ச்சனா கூறுகிறார். இந்த நேரத்தில் மயிலு உங்களை அம்மா பூஜை ரூமுக்கு கூப்பிடுறாங்க என சொல்கிறார். என்ன விஷயம் என சந்தியா கேட்க தெரியல அம்மா பாட்டி ஐயா எல்லோரும் அங்க தான் இருக்காங்க என கூறுகிறார். அர்ச்சனா மனச திடப்படுத்திட்டு போ என சொல்லி அனுப்புகிறார்.

பிறகு எல்லோரும் பூஜை அறையில் ஒன்று கூட அத்தை சொன்னதுலயும் நியாயங்கள் இருக்கு. ஆனா நான் யோசிச்சு பார்த்தேன். இப்பவும் என்னுடைய முடிவுல உறுதியா இருப்பேன் நீ போலீஸ் ஆகு சொல்லி அவருடைய அப்பா கொடுத்த பேனாவை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொடுக்கிறார் சிவகாமி. அத்தை என்ன மன்னிச்சிடுங்க ஒரு மருமகளா உங்க பேச்சை எப்படி கேட்கணுமோ அதை போல் ஒரு மாமியாரா என்னுடைய மருமகளோட கனவுக்கு நான் தோள் கொடுக்கணும் என கூறுகிறார். இதனால் வள்ளி பாட்டி என்னமோ பண்ணுங்க வரப்போறதை அனுபவிக்க போறது நீங்கதான் என கோபித்துக் கொண்டு செல்கிறார். சந்தியா என்னைக்கும் உங்க பெயரை நான் எடுக்க மாட்டேன் குடும்பம் வேலை என இரண்டையும் சமமாக பார்ப்பேன் என வாக்கு கொடுக்கிறார்.

சந்தியாவுக்கு சைலன்ட் வில்லியாக மாறும் சிவகாமி.. காத்திருக்கும் சூழ்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு ரூமுக்குள் ரவி சிவகாமி நீங்க இப்படி அம்மா சொல்லியும் உன்னுடைய முடிவுல உறுதியாய் இருக்கிறதை பார்த்தால் எனக்கு ஆச்சரியமா இருக்கு. சந்தோஷமா இருக்கு இதெல்லாம் ஒரு கனவோனு தோணுது என கூறுகிறார். பிறகு சிவகாமி சிரித்துவிட்டு இதில் கொஞ்சம் தான் உண்மை என கூறுகிறார். இப்பவும் சந்தியா போலீஸ் அதிகாரியாக ஆகுறதுல எனக்கு விருப்பமில்லை. அதுக்காக அதை நான் நேரடியா சொன்னா இல்ல வீட்டுக்கு எதிரியாகிடுவேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.