குழந்தை விஷயத்தில் அர்ச்சனாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியாவும் சரவணனும் ஒருவரை ஒருவர் நினைத்து போனில் பேசிக்கொண்டிருக்க சந்தியா உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு நீங்க நேர்ல வந்து காலிங் பெல் அடிச்சா அது தான் நிஜமாகவே சூப்பர் சர்ப்ரைஸ் என சொல்லி வைக்கிறார்.

குழந்தை விஷயத்தில் அர்ச்சனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சரவணனால் ஷாக்கான சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

அதன் பிறகு சிவகாமி, ரவி என எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது வரும் சரவணன் சந்தியா தன்னை பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க என்ன சொல்ல அவருடைய அப்பா ஏன்டா சரவணா உனக்கு ஆசை இல்லையா என கேட்க சிவகாமி சும்மா இருங்க அது எப்படி இல்லாம இருக்கும் என சொல்கிறார்.

அடுத்து சிவகாமி, சந்தியா பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க அர்ச்சனா அதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து வயிறு எரிகிறார். அதன் பின்னர் சந்தியாவை லீவு என்பதால் ஜோதி மற்றும் சேட்டா வெளிய கூப்பிட நான் வரல என சொல்லி ரூமுக்குள் இருக்க உங்கள் ஞாபகமாவே இருக்கு உங்கள பாக்கணும் போல இருக்கு என்ன சரவணன் பற்றி நினைக்க சரவணன் நேரில் வருவது போல தோன்றுகிறது.

சும்மா சும்மா எதுக்கு இப்படி வந்து ஞாபகப்படுத்திட்டே இருக்கீங்க என சந்தியா புலம்பிக் கொண்டிருக்க காலிங் பெல் அடிக்க சரவணன் நிற்கிறார். சந்தியா இதுவும் பிரம்மை என நினைத்து வந்து நேர்ல வாங்க இல்லன்னா வந்து இப்படி டார்ச்சர் பண்ணாதீங்க என சொல்லி கதவை சாத்தி உள்ளே வந்துவிட சிவகாமி போன் போட்டு சரவணன் உன்னை பார்க்க வரதா சொன்னான், வந்துட்டானா என கேட்க அப்போது தான் சந்தியாவுக்கு உண்மையாவே அது சரவணன் தான் என தெரிய வர ஓடிப் போய் சரவணனை தேட சரவணன் ஒரு இடத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறார்.

குழந்தை விஷயத்தில் அர்ச்சனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சரவணனால் ஷாக்கான சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

அதன் பிறகு சந்தியா சரவணன் கட்டிப்பிடித்து காதலை வெளிப்படுத்துகிறார். இந்த பக்கம் பக்கத்து வீட்டு பெண்மணி அர்ச்சனாவின் குழந்தையுடன் வந்து ஸ்வீட் கொடுக்க என்ன விஷயம் என கேட்க எனக்கு குலுக்கல் சீட்டுல நாலு லட்ச ரூபாய் பணம் கிடைச்சு இருக்கு என்ன சொல்கிறார். எல்லாம் என் பொண்ணு வந்த அதிர்ஷ்டம் என சொல்லி குழந்தையை பற்றி பெருமையாக கூறுகின்றனர். அர்ச்சனா அது என் குழந்தை என மனதுக்குள் வேதனைப்படுகிறார்.

அதிர்ஷ்ட லட்சுமியை இப்படி தூக்கி கொடுத்துட்டேனே என வருத்தப்படுகிறார். பிறகு செந்தில் குழந்தை வாங்கி வைத்துக் கொண்டிருந்தபோது மீண்டும் அம்மாவிடம் செல்லாமல் செந்திலையே பிடித்தபடி இருக்க அதை பார்த்து அனைவரும் ஆச்சரியமாக பேச அர்ச்சனா கரெக்டா அப்பாவை கண்டுபிடிச்சிடுச்சு இதுதான் இரத்த பாசமா என அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.