சந்தியா படுத்த படுக்கையாக கிடக்க சரவணனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் கடையில் இருக்க அப்போது கடைக்கு வரும் சங்க உறுப்பினர்கள் சரவணனை எதிர்த்து பரந்தாமன் செந்திலை நிறுத்தும் விஷயத்தை சொல்ல இதைக் கேட்டு சரவணன் அதிர்ச்சி அடைகிறார். இதைப் பற்றி செந்திலிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி அனுப்புகிறார்.

படுத்த படுக்கையாக கிடக்கும் சந்தியா... சரவணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து ஆதி தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போய் ஜெஸ்ஸி பியூட்டி பார்லர் வைத்தே ஆக வேண்டும் என அடம் பிடிக்கிறார். நான் இப்போதைக்கு வேண்டாம் என சொல்லியும் கேட்கல அம்மாவும் பார்லர் வைக்க சரினு சொல்லிட்டாங்க இப்போ பணம் இல்ல. வட்டிக்கு பணம் கேட்டாலும் வட்டி அதிகம் சொல்றாங்க உங்களால முடிஞ்சா 5 லட்சம் கொடுத்து உதவ முடியுமா? அந்த பணத்தை நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என சொல்ல ஜெஸ்ஸியின் அப்பா 5 லட்சம் ரூபாய் பணத்தை தூக்கி கொடுக்கிறார்.

அடுத்து ஜோதி மற்றும் சேத்தா சந்தியாவையும் கேன்டீன் கூட்டி போகலாம் என கதவைத் திட்ட சந்தியா கதவை திறக்காமல் இருக்க சந்தேகப்பட்டு வேறொரு சாவியை வைத்து கதவை திறக்க உள்ளே சந்தியா உடல் நலக்குறைபாடல் படுத்த படுக்கையாக கிடக்கிறார். இந்த பக்கம் சரவணன் சந்தியா போனை எடுக்காததால் என்ன ஆச்சு என தெரியாமல் குழம்பி போய் இருக்க கை தவறி கண்ணாடி கிளாஸ் கீழே விழ இன்னும் பயப்படுகிறார்.

படுத்த படுக்கையாக கிடக்கும் சந்தியா... சரவணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு ஜோதிக்கு சரவணன் போன் செய்ய உடல்நிலை சரியில்லாத விஷயம் தெரிந்து பதறுகிறார். பிறகு சந்தியாவிடம் பேசிவிட்டு ஜோதியிடம் சந்தியாவை கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க சுடுதண்ணி வச்சு கொடுங்க சாப்பாடு கொடுங்க மாத்திரை கொடுங்க என சொல்ல ஜோதி அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம் நீங்க கவலைப்படாதீங்க என தைரியம் கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.