அர்ச்சனா கேட்ட கேள்வியால் அவளை டாக்டர் விரட்டியடித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் செந்திலும் அர்ச்சனாவும் செக்கச் சென்றிருக்க ஹாஸ்பிடல் அர்ச்சனா ஆண் குழந்தை தான் பிறக்கும் நாலு பேரு தேர்ந்தெடுத்து வச்சிருக்கேன் என சொல்ல செந்தில் திட்டுகிறான். பிறகு பக்கத்தில் ஒரு பெண்மணி பெண் குழந்தையோடு வந்து உட்கார அதை பார்த்த செந்தில் குழந்தையை கொஞ்சம் அர்ச்சனா எங்க அது பெண் குழந்தை என அர்ச்சனா முகத்தை சுழிக்க ஹாஸ்பிடல்னு பார்க்கிறேன் இல்லன்னா அடி வாங்குவ என திட்டுகிறான்.

அர்ச்சனா கேட்ட கேள்வியால் விரட்டி அடித்த டாக்டர்.. இன்டர்வியூக்கு போன சந்தியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு உள்ளே டாக்டர் அர்ச்சனாவை பரிசோதனை செய்து குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர். அதன் பிறகு அர்ச்சனா செந்திலை வெளியே அனுப்பிவிட்டு டாக்டரிடம் எனக்கு பிறக்க போறது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று கேட்க டாக்டர் சத்தம் போட்டு அர்ச்சனாவை வெளியே துரத்துகிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் சிவகாமி மற்றும் ரவி என இருவரும் குழந்தை எப்படி இருக்கு டாக்டர் என்ன சொன்னாங்க என கேட்கின்றனர்.

அடுத்ததாக சந்தியா சரவணன் மெட்ராஸுக்கு கிளம்ப அர்ச்சனா கொளுத்தி போட சிவகாமி போஸ்டிங் இந்த ஊர்ல தான் இருக்கணும் வேற எங்கேயும் போக அனுமதிக்க மாட்டேன் என சொல்ல இருவரும் சரி என சொல்லி கிளம்புகின்றனர். பஸ்ஸில் சந்தோஷமாக பேசிக்கொண்டு செல்ல திடீரென பஸ் நிற்க என்ன ஏது என பார்க்க பிரேக் டவுன் ஆகிறது.

அர்ச்சனா கேட்ட கேள்வியால் விரட்டி அடித்த டாக்டர்.. இன்டர்வியூக்கு போன சந்தியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

நீண்ட நேரம் ஆகும் போலயே என சந்தியா பதட்டம் அடைய சரவணன் காலையில் சரியான நேரத்திற்குள் உங்களை எப்படியாவது அழைத்துச் செல்கிறேன் என ரோட்டில் போகும் கார்களை லிப்ட் கேட்க எந்த காரும் நிற்காமல் போகிறது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.