
நடு இரவில் வந்த போன் காலால் சந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து சந்தியாவுக்காக காத்திருக்க சிவகாமி சந்தியாவை திட்டி தீர்க்க பிறகு சந்தியா வந்ததும் எல்லோரும் வீட்டுக்கு கிளம்புகின்றனர்.

அதன் பிறகு சரவணன், சந்தியா என இருவரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க சரவணன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக கண்ணில் மூடி வீட்டுக்குள் அழைத்துச் சென்று ரூமுக்குள் ப்ரேம் போட்டு மாட்டி இருக்கும் சந்தியாவின் புகைப்படத்தை காட்ட சந்தியா சந்தோசப்படுகிறார்.
பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சிவகாமி ரூம் கதவைத் தட்டி அந்த வாக்கி டாக்கியை கொஞ்சம் ஆப் பண்ணி வைக்க சொல்ல சரவணன் அதை எல்லாம் ஆப் பண்ணி வைக்க முடியாது என சொல்லிக் கொண்டிருக்க சிவகாமி சந்தியாவை இதெல்லாம் ஒரு வேலை என திட்டி விட்டு செல்கிறார். அதன் பிறகு சந்தியாவுக்கு ஒரு போன் கால் வர அதில் ஐஜி வருகிறார் நீங்க உடனே கிளம்பி வாங்க என சொல்ல சந்தியா கிளம்பி செல்கிறார்.

நைட் டியூட்டியில் வேலை பார்க்கும் சந்தியாவுக்கு சரவணன் டீ போட்டு எடுத்துக் கொண்டு சென்று குடிக்க வைக்கிறார். பிறகு அந்த வழியாக ஆம்புலன்ஸ் என்று வர அதனை பரிசோதனை செய்யாமல் அனுப்பி வைக்க சரவணன் எனக்கு என்னவோ அந்த ஆம்புலன்ஸ் மேல சந்தேகமா இருக்கு என சொல்ல சந்தியா ஆம்புலன்ஸ் பிடித்து பரிசோதனை செய்ய உள்ளே அனைத்தும் பண கட்டுகளாக இருக்கின்றன. இதனால் சந்தியா அதிர்ச்சி அடைந்து அனைத்து பணத்தையும் பறிமுதல் செய்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.