அர்ச்சனா செய்த வேலையால் நடுவர்களிடம் மோசமாக அசிங்கப்பட்டுள்ளார் சரவணன்.

Raja Rani 2 Episode Update 13.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. போட்டியாளர்கள் அனைவரும் மேடையில் டேன்ஞர் சோனில் உள்ள போட்டியாளர்களுக்கு என தனியாக போட்டி நடத்தப்படவுள்ளது. இந்த நேரத்தில் சரவணனுக்கு எதிரியாக இருக்கும் ஷல்மா மற்றும் அர்ச்சனா ஆகியோர் சேர்ந்து போட்டி நடத்தும் குழுவில் இருந்து ஒருவரை பணம் கொடுத்து உப்பில் சர்க்கரையையும், மிளகாய் தூளில் குங்குமத்தையும் மற்றும் மஞ்சள் தூளில் சந்தனத்தையும் கலக்க வைக்கின்றனர்.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

டேஞ்சர் சோனில் உள்ள போட்டியாளர்களுக்கு போட்டி துவங்குகிறது. அதாவது ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒரு பொருளில் ஏதாவது ஒன்று குறையும் அல்லது கூடுதலாக இருக்கும். அதனை சரிசெய்து சரியான சுவையில் கொண்டு வர வேண்டும் என கூறுகின்றனர். சரவணனுக்கு வந்தது சிக்கன் கிரேவி. அதனை சாப்பிட்டு பார்த்து அவர் வெற்றிகரமாக இதனை சமைத்து விடலாம் என மகிழ்ச்சியாக சமைக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட கலப்படப் பொருட்கள் தவறிக் கீழே கொட்டி விடுகிறது. பிறகு மீண்டும் அவருக்கு பொருள்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்தப் பக்கம் சிவகாமி மிகுந்த பதற்றத்தோடு இருக்க அனைவரும் கொடுத்த பொருட்களை சரியாக சமைக்கின்றனர். நடுவர்கள் ஒவ்வொருவர் சமைத்த பொருட்களையும் டேஸ்ட் செய்கின்றனர். சரவணன் செய்த சிக்கன் கிரேவி டேஸ்ட் செய்து விட்டு அவரை மோசமாக திட்டி தீர்க்கின்றனர். நீ எல்லாம் எதுக்கு இந்த போட்டிக்கு கலந்துக்க வந்த? இதைக் கூட சரியா செய்ய தெரியல. இது பைனலுக்கு போற வாய்ப்பு இங்கேயும் இப்படி சொதப்பி இருக்கீங்க. உப்பு எது சர்க்கரை எதுனு கூட தெரியல நீ எல்லாம் என்ன சமையல்காரன் என திட்டி விடுகின்றனர்.

எனக்கும் Meera Mithun-க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது – மேடையில் கதறிய Kothandan

இதை நீங்களே சாப்பிட்டு பாருங்க என சரவணனை சாப்பிடச் சொல்கின்றனர். சரவணன் அதை சாப்பிட முடியாமல் கீழே துப்பி விடுகிறார். நான் சரியாகத்தான் செய்தேன் என சொல்லியும் நடுவர்கள் அதைக் கேட்கவில்லை. அர்ச்சனாவும் செந்திலும் கோபப் படுகின்றனர். ஆனால் சரவணனின் அப்பா இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் அமைதியாக இருங்கள் என சொல்லிவிடுகிறார். அர்ச்சனா சந்தோஷத்திலிருக்க இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

இதனை தொடர்ந்து வெளியான புரோமோவில் சரவணன் மயங்கி கீழே விழுந்து விட அனைவரும் வருகின்றனர். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.