போட்டியில் கலந்துகொண்ட சரவணன் ஜெயித்ததை அவரது குடும்பத்தார் பெரிசாக கண்டுக்காமல் இருந்தது சரவணனுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Raja Rani 2 Episode Update 11.11.21 : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இரண்டாம் சுற்றிக் மொத்தம் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிக பணத்துடன் சரவணன் முதலிடத்தைப் பிடித்தார்.

பிறகு சரவணனுக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் சந்தியா அதற்குள் வீட்டுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல சிவகாமி கண் கலங்கி அழுதார். உடனே செந்தில் போனை வாங்கி பேச சந்தியா சரவணன் 2-வது சுற்றுக்கு ஜெயித்து பைனலுக்கு சென்று விட்டதாக சொன்னார். உடனே சென்று வீட்டில் உள்ள அனைவரிடமும் சண்டை சரவணனின் அப்பா போனை வாங்கி பேசினார். பிறகு சந்தியாவிடம் இந்த விஷயம் எங்களுக்கு தெரியும்னு சரவணனுக்கு சொல்லாதே அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என சொல்ல சந்தியாவின் சரி என கூறி அதேபோல் சரவணனிடம் வீட்டிற்கு லைன் போகவில்லை என கூறி விடுகிறார்.

சிவகாமி சர்ப்ரைஸ்னா என்னன்னு கேக்க இன்ப அதிர்ச்சி கொடுப்பதுதான் சர்ப்ரைஸ் என கூறுகின்றனர். பிறகு சரவணனின் அப்பா ஒரு திட்டத்தை சொல்கிறார். மேலும் சரியென சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகி விட்டனர். இந்த பக்கம் சந்தியாவை சரவணன் வீட்டில் இருக்க அப்போது போலீஸ் ஒருவர் வந்து இங்க நிற்க கூடாது என கூறுகிறார். சரவணன் போலீஸ் கலர் டிரஸ் இன் இருந்ததால் நீங்க உண்மையான போலீஸ்னு எப்படி நம்பறது என சொல்ல உடனே சந்தியா போலீசை சமாளித்து சரவணனை அங்கிருந்து அழைத்து வருகிறார்.

பிறகு அவர் உண்மையான போலீஸ் தான்.. காக்கி பேண்ட், ஷூ ஹேர் ஸ்டைல் இதெல்லாம் பார்த்தால் தெரியலையா என கேட்கிறார். பிறகு சரவணனை அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார். தன்னுடைய ஐபிஎஸ் கனவை சரவணனிடம் சொல்லலாம் என முயற்சித்த போது தான் போலீஸ் வந்து தடுத்து விடுகிறார்.

மறுநாள் காலையில் வீட்டில் அனைவரும் சரவணனுக்காக காத்துக் கொண்டிருக்க ஆட்டோவில் வந்து இறங்குகின்றனர். சரவணன் ஆசை ஆசையாக வர யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. எல்லோரும் சரவணனை கண்டுக்காமல் வேறு ஒரு வேலையை செய்ய அவர் கொஞ்சம் அப்செட் ஆகி விடுகிறார். ரூமுக்கு போகலாம் வாங்க என சொல்லும் நேரத்தில் சிவகாமி சீக்கிரம் ரெடி ஆகி விட்டு வா பாட்டி வீட்டுக்கு போகணும் என கூறுகிறார். ஆனால் அவருடைய அப்பா இதெல்லாம் நான் சொன்ன திட்டத்தில் இல்லையே என உளறி விடுகிறார். சரவணன் ஷாக்காக பார்க்க இத்துடன் முடிகிறது ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.