அதிரடி ரைடால் அதிர்ச்சி கொடுத்துள்ளார் சந்தியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா ஸ்டேஷனில் இருக்கும்போது இரண்டு ஊர் தலைவர்கள் வந்து கோவில் திருவிழா நடக்கப்போவதாகும் அதற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் பிளாக்கில் சரக்கு விற்பதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து விட்டு செல்ல சந்தியா சரக்கு எங்கே பிளாக் கிடைக்கிறது என சரவணனுக்கு போன் போட்டு கேட்கிறார்.

சரவணன் பரந்தாமன் தேர்தல் நேரத்தில் சரக்கு கொடுத்த விஷயத்தையும் அவன் பர்னிச்சர் குடோனில் சரக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை சொல்ல சந்தியா உடனடியாக போலீஸ் உடன் சென்று ரைடு நடத்தி மது பாட்டில்கள் மொத்தத்தையும் கைப்பற்றுகிறார்.

இந்த விஷயத்தை பரந்தாமன் கவிதாவிடம் சொல்ல அவர் உடனடியாக வீரமணியை ஜாமினில் வெளியே எடுக்க முயற்சிகளை மேற்கொள்ள சொல்கிறார். மறுபக்கம் அந்தியா வீட்டுக்கு வர எல்லோரும் தயாராகி காத்துக் கொண்டிருக்க என்ன விஷயம் என கேட்க சரவணன் ட்ரீட் தருவதாக சொல்ல சிவகாமி இதெல்லாம் தேவையா என சத்தம் போட சரவணன் குடும்பத்தோட எல்லோரும் ஒண்ணா வெளியில போயிட்டு வந்தா நல்லா இருக்கும் என சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.

அதன் பிறகு எல்லோரும் ஹோட்டலுக்கு கிளம்ப சிவகாமி சந்தியா தான் கார்ல முன்னாடி உட்காருவா, நம்மள பின்னாடி தான் உட்கார வைப்பா என நினைத்திருக்க அதற்கு மாறாக சந்தியா சிவகாமியை முன்னாடி உட்கார வைக்கிறார். அப்போது அங்கு இருக்கும் துப்பாக்கியை பார்த்து சிவகாமி சந்தியா துப்பாக்கி எடுத்து தன்னை சுடுவது போல நினைத்து பயந்து காரை விட்டு வெளியே ஓடி வர சந்தியா அந்த துப்பாக்கியை மறைத்து வைத்து உட்கார வைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.