அடிபட்டு ஹாஸ்பிடலில் கிடக்கும் ரவிக்கு ரத்தம் கொடுக்க வந்துள்ளார் ஜெஸ்ஸி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ரவிக்கு ஏபி நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுவதால் எல்லோரும் அங்கங்கு அலைந்து கொண்டிருக்க ஆதி ஜெசிக்கு போன் செய்து அப்பாவுக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை கூறுகிறான். மேலும் ஏபி நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாக சொல்கிறான்.

அடிபட்டு ஹாஸ்பிடலில் கிடக்கும் ரவிக்கு ரத்தம் கொடுக்க வந்த ஜெஸ்ஸி.. சிவகாமியை பார்த்து சந்தியா கேட்ட கேள்வி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த பக்கம் சந்தியா ஜெஸ்ஸி ஒருமுறை தனக்கு ஏபி நெகட்டிவ் ரத்தம் என சொன்னதை நினைவு கொண்டு வந்து உடனே சரவணன் தனியாக வைத்து இந்த விஷயத்தை சொல்கிறான். ஆனா அவ வேறு மதம் என்பதால் அத்தை பாட்டி இதற்கு ஒத்துக் கொள்வார்களா என தெரியவில்லை என சொல்ல அதெல்லாம் கண்டிப்பா சம்மதிப்பார்கள் என சொல்லி சரவணன் இந்த விஷயத்தை சொல்ல உடனே அந்த பொண்ண வர சொல்லுங்க என கூறுகின்றனர். உடனே சந்தியா இந்த நேரத்துல இப்படி கேட்கக்கூடாது தான் இருந்தாலும் கேட்கிறேன். வேறு மதத்தோட பொண்ணோட ரத்தம் மட்டும் மாமாவுக்கு ஏத்துறது தப்பில்லையா என கேட்க இருவரும் முகத்தை தொங்க போடுகின்றனர்.

அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் உடனே அவளை வர சொல்லு என சிவகாமி சொல்ல அதற்கு அவசியமில்லை என ஆதி சொல்ல ஜெசி தனது குடும்பத்தோடு வந்து நிற்கிறார். பிறகு ஜெஸ்ஸி ரவிக்கு ரத்தம் கொடுக்க திடீரென அவருக்கு உடல் தூக்கி போட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மருத்துவர்கள் அவருக்கு கழுத்தில் சில நரம்புகள் வேலை செய்யவில்லை மருந்து மாத்திரைகள் வேலை செய்யவில்லை என சொல்ல சிவகாமி கோவிலில் அழுது புலம்பி கடவுளிடம் வேண்டுகிறார்.

அடிபட்டு ஹாஸ்பிடலில் கிடக்கும் ரவிக்கு ரத்தம் கொடுக்க வந்த ஜெஸ்ஸி.. சிவகாமியை பார்த்து சந்தியா கேட்ட கேள்வி - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அந்த நேரத்தில் அங்கு ஓடி வந்த ஆதி அப்பா கண் முழித்து விட்டார் என சொல்ல கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சிவகாமி ஹாஸ்பிடல் ஓடி வந்து தனது கணவனை பார்க்கிறார். என் வேண்டுதல் வீண் போகல அவரை நீ காப்பாத்தி கொடுத்துட்டேன் நன்றி கடவுளே என சொல்ல நர்ஸ் நன்றிய கடவுளுக்கோ டாக்டருக்கோ சொல்லாதீங்க அவங்களுக்கு சொல்லுங்க என ஜெசியை கை காட்ட இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.