
வேலைக்கு போன முதல் நாளே வீட்டில் பிரச்சனை வெடிக்க சந்தியாவை மோசமாக பேசியுள்ளார் சிவகாமி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா தன்னுடைய பாதுகாவலரை ஸ்டேஷன் பூட்டை உடைக்க சொன்ன அப்போது வீரமணி என்ற ரவுடி உயிர் மேல பயம் இல்லாதவன் பூட்டை உடை என சொல்லி நக்கலாக பேச சந்தியா அவனுக்கு பளார் என அறை விட்டு கைது செய்கிறார்.

அதன் பிறகு அப்துலுக்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்ல அப்துல் முதலில் நீ போலீஸ்காரர்களிடம் பேசு உன் மனசுக்கு என்ன சரின்னு படுதோ அதை செய்யணும் என அறிவுரை சொல்ல பிறகு சந்தியா போலீஸ்களை அழைத்து உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் தரேன். ஒன்னு போலீசா உங்களுடைய கடமையை செய்ய முடியும்னா எங்க இருங்க இல்லனா இந்த வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்துட்டு போயிட்டே இருங்க என சொல்ல போலீஸ் ஒழுங்காக வேலையை செய்வதாக வாக்கு கொடுக்கின்றனர்.
அதன் பிறகு சரவணன் சந்தியாவுக்காக கவிதை யோசித்து கொண்டு இருக்க சர்க்கரையிடம் ஐடியா கேட்க அவன் புத்தகத்தில் இருக்கும் கதையை காட்ட அதை சரவணன் சந்தியாவுக்கு போன் போட்டு சொல்ல சந்தியா அது சுடப்பட்ட கவிதை என்பதை அறிந்து கொள்கிறார். சுயமாக ஒரு கவிதை எழுதி இரவுக்குள் சொல்ல வேண்டும் என ஆர்டர் போடுகிறார்.
அதன் பிறகு வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இருக்க அப்போது போலீஸ் கோட்ரசிலிருந்து வருவதாக இருவர் வந்து சந்தியா மேடம்க்கு கோட்ரஸ்ல வீடு ஒதுக்கி இருக்காங்க. அவர்களுடைய பொருட்களை எடுத்துட்டு வர சொல்லி இருக்காங்க என சொல்லி கேட்க சிவகாமி வேலைக்கு போய் ஒரு நாள் ஆகல அதுக்குள்ள அவளுடைய ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டா. ஒரு விஷ பாம்புக்கு இவ்வளவு நாளா பால் ஊத்தி இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப கேவலமா இருக்கு என சந்தியாவை திட்டுகிறார்.

அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை ஏதோ தவறு நடந்து இருக்கிறது என சரவணன் சொல்ல உனக்கு என்ன சந்தியா போனதும் பின்னாடியே நாய்க்குட்டி மாதிரி வாலை ஆட்டிகிட்டு போயிடுவ என திட்டுகிறார். அதன் பிறகு சந்தியா வீட்டுக்கு வர சிவகாமி மோசமாக அவரை திட்ட பிறகு பொருட்களை எடுத்துச் செல்ல வந்திருந்த இருவர் அதிகாரியிடம் பேசி விட்டு வந்து சந்தியா மேடம் கோட்ரஸ் வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டதாக சொல்கின்றனர்.
இதனால் சிவகாமி பதில் ஏதும் பேச முடியாமல் வாயடைத்து நிற்க ரவி எல்லோரையும் கலைந்து போக சொல்லிவிட்டு சிவகாமியை அவசரப்பட்டு இப்படி பேசிட்ட என திட்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.