முதல் நாள் ஸ்டேஷனுக்கு போன சந்தியாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா போலீஸ் டிரஸ் அணிந்து ஸ்டேஷனுக்கு கிளம்ப சிவகாமி ஆறு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துடனும் என்ன வேலை எப்படிப்பட்ட முக்கியமான வேலையா இருந்தாலும் ஆறு மணிக்குள்ள வீட்டுக்குள்ள இருக்கணும் என கண்டிஷன் போடுகிறார்.

இந்த நேரத்தில் கவிதா வீட்டுக்கு வந்து சந்தியாவுக்கு வாழ்த்து சொல்லி உனக்கு எந்த உதவியாக இருந்தாலும் தயங்காம என்கிட்ட கேளு என சொல்லி ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வாட்ச் கிப்டாக கொடுக்க சந்தியா அதை வாங்க மறுக்கிறார். எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து பேசுங்க, வீட்ல நான் இந்த வீட்டோட மருமக மட்டும்தான் என பதிலடி கொடுக்கிறார்.

அப்போது சரவணன் உள்ளே வர கவிதா சரவணனை பார்த்து ஹேய் மேன் நீ என்ன இங்க? ஸ்வீட் ஏதாச்சும் டெலிவரி பண்ண வந்தியா என நக்கலாக பேச சிவகாமி நீ யாரு என் வீட்டுக்குள்ள வந்து என் பையன பத்தி இப்படி பேசிகிட்டு இருக்க என சொல்ல சரவணன் ஆமா இவங்க என்னுடைய அப்பா அம்மா அவங்க என்னுடைய தம்பிங்க, இவங்க என்னுடைய மனைவி சந்தியா ஐபிஎஸ். எப்படி இருக்காங்க என் தேவதை என சொல்லி கவிதாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

மேலும் சந்தியா அவர் இப்போ வெறும் ஸ்வீட் கடை சரவணன் மட்டுமல்ல தென்காசியோட வியாபார சங்கத் தலைவர் என சொல்லி அதிர்ச்சி தருகிறார். சரவணன் கவிதாவுக்கு பதிலடி கொடுத்து அனுப்ப உங்க ரெண்டு பேரையும் என் காலில் விழ வைக்கிறேன் என மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார் கவிதா.

அதன் பிறகு சந்தியா ஸ்டேஷனுக்கு வர ஸ்டேஷன் பூட்டி கிடக்க போலீஸ்காரர்கள் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்க அவர்களை அழைத்து ஸ்டேஷன் போட்டி கிடக்கும் காரணம் கேட்க வீரபாண்டி என்பவர் பூட்டி சாவி எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் அவரை மீறி எதுவும் செய்ய முடியாது எனவும் சொல்கின்றனர்.

சந்தியா இன்னும் பத்து நிமிஷத்துல அவன் இங்க இருக்கணும் என சொல்ல போலீஸ் அவனுக்கு போன் போட முயற்சி செய்ய போன் போகாமல் இருக்கிறது. பிறகு சந்தியா பூட்டை உடைக்க சொல்ல பாடிகாட் பூட்டை உடைக்க போக உயிர் மேல பயம் இல்லாதவன் பூட்டை உடைங்க என சொல்லி ஒரு சத்தம் வருகிறது. இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.