சந்தியா வீட்டுக்கு வந்த முதல் நாளே அர்ச்சனா சதி வேலையை ஆரம்பித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கவிதா வீட்டுக்கு வர பரந்தாமன் அவர்களை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்று அப்பா இருந்த இடத்தில் இனி நீங்கள் தான் இருந்து வழிநடத்த வேண்டும் உங்களுக்கு பக்கபலமாக நான் இருப்பேன் என சொல்கிறார்.

அடுத்து இந்த பக்கம் அர்ச்சனா செந்திலகடம் குழந்தைக்கு நிறைய சேர்த்து வைக்கணும் என சொல்ல நான் சம்பாதிக்கிறது எல்லாம் அவனுக்கு தானே என செந்தில் சொல்கிறார். அதெல்லாம் போதாது இன்னும் நிறைய சேர்க்கணும் என அர்ச்சனா சொல்கிறார். மேலும் நம்ம கடைய சந்தியா ஐபிஎஸ் டெக்ஸ்டைல்ஸ் என பெயர் மாற்றி வியாபாரம் பண்ண தொடங்கினா விற்பனை பிச்சுகிட்டு போகும் என சொல்ல செந்தில் அர்ச்சனாவை திட்டுகிறார்.

அடுத்து ஆதி சந்தியாவின் பெயரை வைத்து பெருசா வளரணும் என திட்டம் போட ஜெஸ்ஸி அவனை திட்டி தீர்க்கிறார். அதன் பிறகு மறுநாள் காலையில் ரவிக்கு காபி போட்டு கொடுக்க சொல்லி சிவகாமி மயிலுவிடம் சொல்ல ரவி சந்தியா கையில காபி குடிக்கணும்னு ஆசையா இருக்கு என சொல்லிக் கொண்டிருக்க ஆதி இனி அவங்க அதெல்லாம் எப்படி செய்வாங்க, அவங்க கிட்ட இந்த வேலையெல்லாம் எப்படி வாங்க முடியும் என சொல்கிறார்.

அதன் பிறகு அங்கு வரும் சந்தியா இதில் என்ன இருக்கு நான் காபி போட்டு கொடுக்கிறேன் என போய் காபி போட அங்கே இருக்கும் அர்ச்சனா சந்தியாவுக்கு போன் வந்த நேரத்தில் சர்க்கரைக்கு பதிலாக உப்பை எடுத்து வைக்கிறார். சந்தியாவும் உப்பை போட்டு காபி போட்டு கொடுக்க சிவகாமி அதை கீழே துப்ப சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.