கவிதாவால் பியூட்டி பார்லர் திறக்கப்பட சந்தியா அதிர்ச்சி அடைகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கவிதாவால் ஜெஸ்ஸியின் பியூட்டி பார்லர் மீண்டும் திறக்கப்பட அப்போது அங்கு வரும் கவிதா உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் என்கிட்ட கேளுங்க நான் செய்கிறேன். உங்க வீட்டு மருமகளா வந்து வாழத்தான் கொடுத்து வைக்கல உங்களுக்கு உதவி செய்யவாவது எனக்கு வாய்ப்பு கிடைக்கட்டும் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு சிவகாமி வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் கவிதா தன்னிடம் பேசியது உதவி கேட்ட விஷயத்தை பற்றியும் சொல்லிக் கொண்டிருக்க சரவணன் அப்செட்டாக அப்போது சந்தியா வருகிறார். ஏங்க பியூட்டி பார்லர் விஷயமா லாயரை பார்க்க சொன்னேனே பார்த்தீர்களா என கேட்க அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நீ உதவி பண்ணலனா எங்களுக்கு வேற யாரும் உதவி பண்ண மாட்டாங்களா பியூட்டி பார்லரை திறந்தாச்சு என சிவகாமி சொல்ல சந்தியா ஷாக் ஆகிறார்.

பிறகு ஜெஸி கவிதா தான் உதவி செய்ததாக சொல்ல அவளா அவ மேல நிறைய கேஸ் கம்பளைண்ட் இருக்கு என சொல்ல சிவகாமி அவ நல்லது செஞ்சதும் நீ பொறாமையில பேசாத என திட்ட சந்தியா ரூமுக்குள் சென்றுவிட உடனே சிவகாமி சரவணனா போய் ஒத்தடம் கொடுத்து கால் கை பிடிச்சு விடு என நக்கலாக பேச சரவணன் எழுந்து உள்ளே வந்து விடுகிறார்.

பிறகு சந்தியா சரவணனிடம் கவிதா பற்றி பேசுகிறார். அடுத்து மறுநாள் காலையில் சிவகாமி தெருவில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற அப்போது சந்தியாவின் பாதுகாவலர் துப்பாக்கி ஏந்தி நின்றபடி இருக்க எதுக்கு சும்மா அந்த துப்பாக்கி தீட்டிக்கிட்டு நின்னுட்டு இருக்க அந்த வண்டியை கொஞ்சம் கழுவி விடு என சரவணன் வண்டியை கழுவச் சொல்கிறார்.

மறுப்பு தெரிவிக்க முடியாமல் சந்தியாவின் பாதுகாவலர் டூவீலர் கழுவ அப்போது வரும் ஆதி அத கழுவி முடிச்சிட்டு இதையும் கழுவிடுங்க அப்படியே சுத்தமா பளபளன்னு இருக்கணும் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது சந்தியா வெளியே வர ஆதியை எச்சரிக்கிறார்.

அதன் பிறகு சந்தியா நீங்க உங்களுக்கான வேலையை மட்டும் பாருங்க இதையெல்லாம் எதுக்கு பண்ணிக்கிட்டு இருக்கீங்க யார் உங்களை இந்த வேலையெல்லாம் பண்ண சொன்னது என கேட்க அப்போது சிவகாமி வெளியே வந்து நான்தான் பண்ண சொன்னேன் என சந்தியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

நீ மட்டும் நல்லா பளபளன்னு இருக்கணும் உன்ன படிக்க வைத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சரவணனுக்கு எதுவும் பண்ண கூடாதா என பேச அங்கு வரும் சரவணன் சந்தியாவுக்கு சப்போர்ட் செய்து பேச சிவகாமி உனக்கு போய் பேசுனேன் பாரு, எனக்கு இது தேவை தான் என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.