சந்தியாவுக்கு சரவணன் சர்ப்ரைஸ் கொடுக்க சிவகாமி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் சந்தியாவின் வருகைக்காக எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்து குடும்பத்தார் காத்திருக்க கரண்ட் கட் ஆன காரணத்தினால் ஆதி மற்றும் அவருடைய அப்பா என இருவரும் லைட் மேனை சந்திக்க டீ கடைக்குச் செல்ல அங்கு அவர் எதுவாக இருந்தாலும் நாளைக்கு தான் இப்ப எதுவும் பண்ண முடியாது என கறாராக பேசி அனுப்பி விடுகிறார்.

இந்த பக்கம் சந்தியாவை சரவணன் ஓரிடத்திற்கு அழைத்துச் செல்ல சந்தியா எங்கே என கேட்க அவர் அமைதியாக இருங்கள் என சந்தியாவின் அப்பா அம்மாவின் நினைவிடத்திற்கு கூட்டி வருகிறார். இதை பார்த்த சந்தியா கண்கலங்கி சரவணனுக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய அப்பா அம்மா சமாதிக்கு சென்று போலீஸ் ஆன விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பேன் என உறுதி எடுக்கிறார்.

அடுத்து அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வரும் போது பார்க் ஒன்றில் நிறுத்த சொல்லி சந்தியா இறங்கி உள்ளே செல்ல அங்கே குழந்தைகள் சிலர் மெழுகுவர்த்தி வைத்து படித்துக் கொண்டிருக்க ஏன் கரண்ட் இல்லையா என கேட்க நடந்த விஷயங்களை அவர்கள் சொல்ல பிறகு சந்தியா சரவணன் ஃபோனிலிருந்து இபிக்கு போன் செய்து ஐபிஎஸ் அதிகாரி பேசுவதாக சொல்ல அவர்கள் பயந்து போய் 10 நிமிடத்தில் கரண்ட் கொடுப்பதாக சொல்கின்றனர்.

அடுத்து ஆதியும் அவருடைய அப்பாவும் சென்று சந்தித்த லைட் மேன் வந்து நீங்க சரவணன் மனைவி சந்தியாவோட வீட்ல இருந்து வர்றேன்னு சொல்லி இருந்தா அப்பவே கரண்ட் கொடுத்திருப்பேன் என சொல்லி மன்னிப்பு கேட்டு இரண்டு நிமிடத்தில் கரண்ட் வந்துவிடும் சந்தியா மேடம் வந்ததும் கரண்ட் வந்துவிட்டது என சொல்லுங்க என சொல்லிவிட்டு செல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

அடுத்து சரவணன் சந்தியா வீட்டுக்கு வர அவருக்கு ஆரத்தி எடுக்க போக சிவகாமி ஒரு நிமிஷம் என அதை தடுத்து நிறுத்துகிறார். இந்த வீட்டுக்குள்ள பதவி அதிகாரம் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு மருமகளா மட்டும் வருவதாக இருந்தால் வரட்டும் இல்லனா அவங்களோட விருப்பம் என சொல்ல ரவி எந்த நேரத்தில் என்ன பேசிகிட்டு இருக்க முதல்ல அவங்கள உள்ள கூட்டிட்டு போய் அதுக்கப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம் என சொல்ல சிவகாமி கட் அண்டு ரைட்டாக இதை சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

அதன் பிறகு சந்தியா இந்த வீட்டுக்குள்ள அதிகாரம் எதையும் பயன்படுத்தக் கூடாது, அத்தை சொன்னா மாதிரியே நான் இருக்கிறேன் என சொல்ல பிறகு வீட்டுக்குள் அழைத்துச் செல்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.