Kanchana 3 Release Date : கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் -என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்.
அதன் படி இந்த வருட கோடையை கொண்டாட ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள முனி 4 படம் ரிலீசாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி இருந்த முனி 3 அல்லது காஞ்சனா 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது.
இதனை தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 அல்லது காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது.
ஒரே ஒரு பாடல் காட்சி தான் இன்னும் ஷூட் செய்யப்பட வேண்டியுள்ளதாம். மிகப் பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள படத்தின் மற்ற பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏப்ரல் மாதம் 18 ம் தேதி இப்படம் உலகம் முழுவது திரைக்கு வர உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.