ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என புதிய சலுகையை அறிவிக்க தயாராகி வருகிறார் ராகவா லாரன்ஸ்.
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.

தற்போது நடிகராக அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து ரசிகர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்து அம்மாவின் பெயரில் ஒரு பெரிய திருமண மண்டபம் கட்ட ஆயத்தமாகி வருகிறார்.

இதற்கான இடத்தை கூட தேர்வு செய்து விட்டதாக கூறியுள்ள லாரன்ஸ் இந்த மண்டபம் தனது ரசிகர்களுக்கு இலவச சலுகை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.