மேக்கப் இல்லாமல் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Radhika With Simbu in VTK Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்து விட்டது. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அடுத்தடுத்து பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு மற்றும் ராதிகா ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ராதிகா கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் பக்கா கிராமத்து பெண்மணி போல இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.