சன் டிவியில் இருந்து புதிய சேனலுக்கு தாவியுள்ளார் ராதிகா.

Radhika Sarathkumar in Upcoming Serial : தென்னிந்திய சினிமாவில் 80களில் நடிகையாக வலம் வந்து பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் இவர் நடித்த சீரியல்கள் எக்கச்சக்கம். இவரது நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி உள்ளிட்ட சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சன் டிவியில் இருந்து புதிய சேனலுக்கு தாவிய ராதிகா.. புதிதாக ஒளிபரப்பாகும் போகும் சீரியல் என்ன தெரியுமா??

இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்தி சீரியல் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி அதில் நடித்து வந்தார். அரசியல் காரணமாக இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.

இந்த நிலையில் நடிகை ராதிகா மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார். ஆனால் இந்த முறை சன் டிவியில் இல்லை கலைஞர் தொலைக்காட்சியில் பொன்னி என்ற சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தயாரிக்க உள்ள இந்த சீரியலில் கெஸ்ட் ரோலிலும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

சன் டிவியில் இருந்து புதிய சேனலுக்கு தாவிய ராதிகா.. புதிதாக ஒளிபரப்பாகும் போகும் சீரியல் என்ன தெரியுமா??

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.