உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாரதிராஜா குணமடைய ராதிகா செய்யும் பிரார்த்தனையின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராக அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் பாரதிராஜா. இவரது முதல் படமான ’16 வயதினிலே’ தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரிட் திரைப்படம் ஆகும். அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், திருசிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் நான்கு நாட்களில் பாரதி ராஜா வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்துடன் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராதிகா சரத்குமார் பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் இயக்குனர் பாரதி ராஜா விரைவில் குணமடைய மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளார். இந்த வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “என் இனிய இயக்குனர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய என் சிறப்பு பிரார்த்தனை. உங்களை விரைவில் காண வேண்டும். உங்களிடம் பேசுவதை மிஸ் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.