காக்க வைத்து கடுப்பாக்கிய ராதிகாவுக்கு ஆப்பு வைத்துள்ளார் பாக்கியா.

Baakiyalakshmi Episode Update 23.05.23 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா தொடர்ந்து பாக்கியாவை வெளியே காக்க வைத்து கடுப்பாக்குகிறார்.

அதன் பிறகு ராதிகா உள்ளே அழைத்து கேண்டின்ல எல்லாம் வசதியா இருக்கா? எதுவும் பிரச்சனையா? சாப்டீங்களா? என்று தேவையில்லாத கேள்விகளை கேட்டு டென்ஷன் ஆக்குகிறார். பிறகு பாக்கியா கேன்டினில் இருந்து வெளியே வர அப்போது கோடீஸ்வரன் ஆபிசுக்கு வர பாக்கியா அவரிடம் சென்று எனக்கும் ராதிகாவுக்கும் ஏற்கனவே கொஞ்சம் பர்சனல் பிரச்சனை இருக்கு அதை அவங்க ஆபீசுக்கு கொண்டு வந்து வேலை செய்ய விடாமல் பண்றாங்க என கம்ப்ளைன்ட் செய்ய ராதிகாவை கூப்பிட்டு வார்னிங் கொடுக்கிறார்.

இதனால் ராதிகா இன்னும் கடுப்பாக அதன் பிறகு பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வர ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுக்கிறார். பாக்கியாவும் பழனிச்சாமியும் ஆங்கிலத்தில் பேசி பழகுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பாக்கியா வீட்டுக்கு வர எழில் நீ ஓகேவா போன் பண்ணும் போது எதுக்கு டென்ஷனா பேசின என விஷயத்தை கேட்க ஆபீஸில் நடந்த விஷயங்களை சொல்கிறார். இதனால் கோபமாகும் ஈஸ்வரி அவ என்ன நினைச்சிட்டு இருக்கா? இன்னைக்கு வரட்டும் அவளை ஒரு வழி பண்ணிடுறேன், அவள போடுற போடுடல கோபியும் திருந்திடனும் என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.