சூர்யா சுதா பணக்காரன் கூட்டணியில் உருவாக உள்ள புறநானூறு படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை முடித்ததும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்கத்தில் உருவாக்க உள்ள புறநானூறு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடமே தொடங்க இருந்தன.
ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே வந்த நிலையில் தற்போது பிரபலங்களின் கால்ஷீட் கிடைத்து அது ஒழுங்கு செய்யப்பட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிடும் என தகவல்கள் கிடைத்துள்ளன. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் அவருக்கு நூறாவது திரைப்படம்.
படத்தில் சூர்யா மட்டுமின்றி துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா என எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.