இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகழின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pugazh With Girl Friend : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக்கு வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். குறிப்பாக குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுக்கொண்டது.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். குறிப்பாக அஜித்துடன் வலிமை படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இப்படி வெள்ளித்திரையில் பிஸியான காமெடி நடிகராக வலம் வரத் தொடங்கி உள்ள புகழ் தற்போது இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர்தான் புகழின் வருங்கால மனைவி என கூறி வருவதோடு அவர்களுக்கு வாழ்த்து கூறியும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.