குக் வித் கோமாளி புகழ் தனது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிசயமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் தனது நகைச்சுவையை தாறுமாறாக வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்து தற்போது வெள்ளி திரையிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது பிசியான நடிகராக வலம் வரும் புகழ் “ஜூ கீப்பர்” என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த பென்சியா என்கின்ற பெண்ணை செப்டம்பர் 1ஆம் தேதி காலை சிறப்பாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலரும் தங்களது திருமண வாழ்த்துக்களை புகழ் மற்றும் பென்சியாவுக்கு தெரிவித்து வந்தனர். இது குறித்து புகழ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவற்றில் அவர், எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள்,நலன் விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்! என்று பதிவிட்டு இருக்கிறார்.