மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற என்ன காரணம் என தெரிவித்துள்ளார் புகழ்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கோமாளிகளில் ஒருவராக முதல் சீசனிலிருந்து பங்கேற்று வந்தவர் மணிமேகலை. திடீரென இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமேகலையின் இந்த வெளியேற்றத்திற்கு அவருடைய கர்ப்பம் தான் காரணம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த நேரத்தில் புகழ் அளித்த பேட்டி ஒன்றின் மணிமேகலை தனிப்பட்ட விஷயம் காரணமாக வெளியேறினார் என கூறியுள்ளார்.

அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு தெரியல ஒரு வேலை அப்படி இருந்தால் எல்லோருக்கும் சந்தோஷம் தான். ஆனால் உண்மை தெரியாமல் வதந்தி பரப்பாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/chettyrajubhai/status/1631510551024275457?t=EUz3-vW-oVA29o44aCJihA&s=19