500 மர கன்றுகளை நட்டு விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் தயாரிப்பாளர் பி. டி செல்வகுமார்.

PT Selvakumar Condolences to Vivekh : தமிழகத்தில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். இவர் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் விவேக் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குனர், தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் என பன்முகங்களை கொண்ட பி. டி செல்வகுமார் அவர்கள் கன்னியாகுமரியில் விவேக்கின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் விவேக் அவர்களின் நினைவாக 500 மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொது மக்களுடன் மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் சசி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.