வின்னராக அறிவிக்கப்பட்ட பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்த இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

மாபெரும் நட்சத்திரபட்டாளங்களில் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் முதல் பாகம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் 300 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா பொன்னியின் செல்வன் 2 வின்னர் என அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.