பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து அப்போஸ்டரை வைரலாகி வருகின்றனர்.